Search for products..

Home / Categories / Traditional Millets /

Little (Samai) Millet - 500g / சாமை அரிசி

Little (Samai) Millet - 500g / சாமை அரிசி

Size: 500g

Select Size *


badge
badge
badge

Product details

இந்த அரிசியில் கால்சிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. ஆகையால் இந்த சாமை அரிசியைச் சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும். எலும்பு முறிவு உள்ளவர்களுக்குச் சாமை அரிசி நல்ல மாற்றத்தைத் தரும்.

ஆண்களின் இனப்பெருக்க விந்தணுவை அதிகரிக்க செய்யும் ஆற்றலானது இந்த சாமை அரிசியில் உள்ளது. இதன் மூலம் ஆண்மை குறைபாட்டையும் நீக்குவதோடு, தாதுப் பொருட்களை உடலில் அதிகரிக்கச் செய்து உயிரணுக்களின் எண்ணிக்கையைக் கூட்டுகிறது.

பொதுவாகவே சிறு தானியங்களில் இரும்புச்சத்துக்கள் அதிகமாக இருப்பது நமக்குத் தெரிந்ததே. இரத்த சோகை வியாதி இருப்பவர்கள் இந்த சாமை அரிசியைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பயன்பெறலாம். அதே போல இந்த அரிசி சாப்பிட்டு வர உடல் நன்கு உறுதியாகவும் நல்ல  ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

சாமையில் சாதாரண அரிசியை விட நார்ச்சத்துக்கள் ஏழு மடங்கு அதிகம் உள்ளது. இதன் காரணமாக உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரும் உதவியாக இருக்கிறது. சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் இந்த சாமை  அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவு குறையும். மேலும் ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயை வராமல் தடுத்து நிறுத்தும்.

சாமை அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து முற்றிலும் விடுபடலாம். மேலும் சாமை அரிசியைச் சாப்பிடுவதால் வயிற்றுச் சம்பந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவிடும்.

சளி, ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்குச் சாமை அரிசி சரியான மருந்து என்று சொல்லலாம். அதாவது, இதில் உள்ள போலிக் அமிலம் மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் இந்த அரிசியில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு நல்ல உடல் வலிமையைத் தரும்.

சாமையில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய கொழுப்புச் சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது. இந்த அரிசியை நாம் உட்கொள்வதால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

ஆக, பல வகையில் பலன்களைத் தரக்கூடிய சிறுதானியமான சாமை அரிசியை வாங்கி சமைத்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்.


Similar products